கண்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்றால் கண் எரிச்சல்,கண்’வீக்கம்,நீர் வடிதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.இன்று பலரும் கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.
கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பாகும்.கண்கள் இல்லையென்றால் வாழ்வே சிரமமாகி விடும்.ஆனால் இன்றைய தலைமுறையினர் கண் தொடர்பான பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பது தான்.
இதனால் கண் சூடு,நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்யலாம்.
கண் எரிச்சல்
புளியங்கொட்டையை அரைத்து தூளாக்கி சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
நல்லெண்ணெயில் அருகம்புல் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
நல்லெண்ணெயில் சிறிது மிளகு சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
தூங்கச் செல்வதற்கு முன் கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அப்ளை செய்தால் கண் சூடு மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
கண் சூடு
பாசிப்பருப்பு சிறிதளவு எடுத்து வேகவைத்து தேங்காய் பால் சேர்த்து பருகி வந்தால் கண் சூடு குறையும்.
பாதிரி மர வேரை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகி வந்தால் கண் சூடு குறையும்.
கருங்காலி மர இலையை ரோஜா இதழுடன் அரைத்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கண் வீக்கம்,எரிச்சல் குணமாகும்.