உங்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள இந்த தீர்வை ட்ரை பண்ணுங்கள்.
தீர்வு 01:
பொன்னாங்கண்ணி கீரை
தண்ணீர்
முதலில் ஒரு கப் பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த பொன்னாங்கண்ணி ஜூஸை வடிகட்டி குடித்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ முதலான ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தீர்வு 02:
நல்லலெண்ணெய்
மருதாணி இலை
செம்பருத்தி பூ
அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 150 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் கைப்பிடி அளவு மருதாணி இலை மற்றும் இரண்டு செம்பருத்தி பூவை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவினால் உடல் சூடு கண் சூடு தணியும்.கண் பார்வை குறைபாட்டை இந்த எண்ணையை கொண்டு சரி செய்யலாம்.
தீர்வு 03:
நந்தியாவட்டை
பார்ப்பதற்கு குண்டுமல்லி பூ தோற்றத்தை கொண்டிருக்கும் நந்தியாவட்டை சிலவற்றை நன்றாக மலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கண்கள் மீது வைத்து காட்டன் துணி கொண்டு கட்ட வேண்டும்.இப்படி செய்து வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.
தீர்வு 04:
கேரட்
பாதாம் பருப்பு
இரண்டு பொருட்களும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரண்டு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து இந்த கேரட் பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி பசுநெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து நான்கு பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி அதோல் போட்டு கெட்டியாகும் வரை கலந்துவிட வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து கேரட் கலவையில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
இறுதியாக இனிப்பு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.