சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Photo of author

By CineDesk

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 168’.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தலைவர் 168 படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்றும், இருப்பினும் இவர் ரஜினிகாந்த் மகளாக நடிக்க இருப்பதாகவும், இவருடைய கேரக்டர் தான் படத்தின் மையப் புள்ளி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா அல்லது குஷ்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதில் மீனாவுக்கு அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தை முடிக்க ‘தலைவர் 168’ படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் இந்தப்படம் 2020ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.