ஜவான் படத்தின் பாடல்களுக்கு நடனமாடும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அதிதி சங்கர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

0
38
#image_title

ஜவான் படத்தின் பாடல்களுக்கு நடனமாடும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அதிதி சங்கர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லி இருவரும் நடனமாடும் வீடியோவும் நடிகூ அதிதி சங்கர் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி பேன் இந்தியன் திரைப்படமாக வெளியானது. ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், பிரியாமணி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் 129 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில் ஆறாவது நாள் வசூல் குறித்த தகவல் நேற்று(செப்டம்பர் 13) வெளியிடப்பட்டது. அதன்படி ஜவான் திரைப்படம் வெளியான நாளில் இருந்து 6 நாட்களில் 621 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜவான் தியைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடிகை அதிதி சங்கர், பிரியா அட்லி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹய்யோடா’ என்ற பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் பிரியா அட்லி அவர்களும் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அதே போல ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வந்த இடம்’ என்ற பாடலுக்கு நடிகை அதிதி சங்கர் அவர்கள் நடனம் ஆடி அந்த வீடியைவை இணையதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.