நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!?

0
153
#image_title

நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!?

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கொல்கத்தா மெட்ரோ இரயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பலவகையான போக்குவரத்து தற்பொழுது இயங்கி வருகின்றது. முக்கியமாக பேருந்து, இரயில் விமானம், மெட்ரோ இரயில், படகு போக்குவரத்து ஆகியவை இந்தியாவில் இயங்கி வருகின்றது. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு வருகின்றது.

மேலும் தற்பொழுது பைக் டேக்சி என்று பைக் மூலம் பயணிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களிலும் போக்குவரத்து வசதி உள்ளது.

இந்த போக்குவரத்துகளில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்வதற்கு மக்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள். மெட்ரோ இரயில் சேவை குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் மெட்ரோ இரயில் போக்குவரத்து மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கி வருகின்றது.

சமீபத்தில் வந்தே பாரத் என்ற பெயரில் புதிய இரயில் சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்த வாந்தே பாரத் இரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மாநில மெட்ரோ இரயில் கார்ப்ரேஷன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவை தொடங்கவுள்ளதாக கொல்கத்தா மெட்ரோ இரயில் கார்ப்ரேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த சேவை டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொல்கத்தா மாநிலத்தில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது. இந்த சுரங்கப் பாதையில் வெற்றிகரமாக மெட்ரோ இரயில் சோதனை நடத்தப்பட்டது. தற்பொழுது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.