மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

0
36
#image_title

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட முகாம்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன.இந்த முகாமில் விண்ணப்பம் பதிவு செய்யாத மகளிர்களுக்கு ஆகஸ்ட் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.செப்டம்பர் 5 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 1.70 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற குறுஞ்செய்தி விண்ணப்பம் செய்த அனைத்து மகளிரின் தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இத்திட்டத்திற்கு தகுதி இல்லாத சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மனு நிராகரிப்பட்டதற்கு காரணம் என்னவென்று சம்மந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் இருந்து அவர்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சோதனை முயற்சியாக இத்திட்டத்திற்கு தேர்வான விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் 1 ரூபாய் செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற இறுதி குறுஞ்செய்தி வருகின்ற செப்டம்பர் 18 அன்று விண்ணப்பம் செய்த அனைத்து மகளிரின் தொலைபேசி எண்ணிற்கும் தமிழக அரசு அனுப்பி வைக்க உள்ளது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், தமிழக அரசு அனுப்பிய குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.