தயிருக்கு மாற்று கெஃபிர்!! இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் மலைத்து போயிடுவீங்க!!

Photo of author

By Divya

தயிருக்கு மாற்று கெஃபிர்!! இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் மலைத்து போயிடுவீங்க!!

Divya

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் குளிர்ச்சி நிறைந்த புரோபயாட்டிக் பொருளாகும்.இந்த தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இந்த தயிரைவிட அதிக புரோபயாட்டிக் சத்துக்கள் நிறைந்த ஒரு பொருளாக கெஃபிர் உள்ளது.

இதுவும் பாலில் இருந்து தயாரிக்கப்படக் கூடிய ஒரு பொருள்தான்.இந்த கெஃபிர் பாலில் மட்டுமின்றி சோயா பால்,தேங்காய் பால் போன்றவற்றை புளிக்கச் செய்தும் தயாரிக்கப்படுகிறது.தயிரை விட அதிக நன்மைகள் கொண்டிருக்கும் இந்த கெஃபிர் அதிக புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.இது தவிர சிறிது கசப்பு சுவையும் கெஃபிரில் இருக்கிறது.

பாலில் உறை ஊற்றி தயாரிக்கப்படுவது தயிர்.அதுவே தானியங்களில் பாலை ஊற்றி புளிக்க செய்வதால் கெஃபிர் கிடைக்கும்.தயிர் உருவாக 8 முதல் 10 மணி நேரம் மட்டும் தேவைப்படும்.ஆனால் கெஃபிர் தயாராக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

தயிரில் புரதம்,லாக்டிக் அமிலம்,வைட்டமின் பி 12 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.ஆனால் கெஃபிர் குறைவான அளவு லாக்டிக் மற்றும் புரதம் மட்டுமே இருக்கிறது.

கெஃபிரை ஸ்மூத்தி,பானமாக பயன்படுத்தலாம்.தயிர் சாதம் போல் கெஃபிரில் சாதம் செய்து சாப்பிடலாம்.தயிரை ஒப்பிடுகையில் கெஃபிரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கெஃபிர் நன்மைகள்:

1)இதில் உள்ள அதிக புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த கெஃபிர் சாப்பிடலாம்.

2)மலச்சிக்கல்,குடல் அலர்ஜி,குடல் வீக்கம் போன்ற பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ள கெஃபிர் உணவுகளை சாப்பிடலாம்.

3)கெஃபிரில் உள்ள கால்சியம் சத்து எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.இதய நோய்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் குணமாக கெஃபிர் சாப்பிடலாம்.

4)கெஃபிரில் உள்ள புரதம் உடல் எடையை மேம்படுத்த உதவுகிறது.உடல் சோர்வு நீங்க கெஃபிர் பானம் பருகலாம்.ஸ

5)சரும ஆரோக்கியம் மேம்பட,சர்க்கரை நோய் கட்டுப்படுத்த கெஃபிர் சாப்பிடலாம்.கெஃபிர் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.உடலில் நல்ல பாக்டீரியாக்கள் எண்ணிக்கை அதிகரிக்க கெஃபிர் சாப்பிடலாம்.