இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!

0
191
Kejriwal who eats a lot of sweets..planned to get bail..!!
Kejriwal who eats a lot of sweets..planned to get bail..!!

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!

டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். 

கைது நடவடிக்கையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க தனது மருத்துவரிடம் வாரத்தில் 3 நாட்கள் வீடியோ கால் மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டுமென அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு அமலாக்கத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும், சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படியாவது ஜாமீன் பெறவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இனிப்பு நிறைந்த மாம்பழங்கள், சர்க்கரை கலந்த தேநீர், மிட்டாய்கள் போன்ற அனைத்தையும் அதிகளவில் சாப்பிடுவதாக அமலாக்கத்துறை கூறும் அமலாக்கத்துறையினர் இதன் மூலம் சர்க்கரை அளவை அதிகரித்து அதை காரணமாக வைத்து ஜாமீன் கோர முயற்சி செய்வதாக கூறியுள்ளனர். 

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான் வழக்கறிஞர் விவேக் அமலாக்கத்துறையினர் ஊடகத்தில் வெளியாகும் தகவல்களை வைத்து வாதாடி வருவதாக கூறி இந்த மனுவை வாபஸ் பெற்று கூடுதல் விவரங்களுடன் சிறந்த மனுவை தாக்கல் செய்கிறோம் என்றார். இதனை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவாலில் உணமுறை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளது.