கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!

Photo of author

By Divya

கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!

கோதுமை மாவில் கேரளா மக்கள் செய்யும் பாணியில் ஒரு போண்டா ரெசிபி.

போண்டா செய்ய தேவைப்படும் பொருட்கள்…

*கோதுமை மாவு
*வாழைப்பழம்
*நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை
*முட்டை
*ஏலக்காய்

போண்டா செய்வது எப்படி?

வாழைப்பழ போண்டா செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் உங்களுக்கு ஏற்ற சுவையில் சர்க்கரை சேர்க்கவும்.

அடுத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பிறகு எந்த வகை வாழைப்பழம் கிடைத்தாலும் அதன் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

பிறகு வாசனைக்காக 1 ;ஏலக்காய் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தற்பொழுது ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு கொட்டி அரைத்த வாழை க்ரீமை அதில் ஊற்றி நன்கு கலந்து போண்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

பிறகு இதை கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு ஊற போடவும். மாவு ஊறி வந்த பின்னர் போண்டா செய்யலாம்.

அதற்கு அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் தயாராக வைத்துள்ள போண்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த போண்டா சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.