முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

0
144

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது. நேரடி தொடர்பில் முதல்வர் இருப்பதாக சந்தேகம் தோன்றுகிறது, மேலும் முதல்வரின் நெருக்கமான சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியது எங்கள் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாக உள்ளது.

 

இந்த மாபெரும் கடத்தல் சம்பவத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்தனர். மேலும் தங்க கடத்தல் விவகாரத்தில் இருந்து எளிதில் தப்ப முடியாது என்று மத்திய இணை அமைச்சர் முரளிதரன் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. கடத்தல் மோசடிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

Previous articleஉங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!
Next articleமாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!