உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!

0
117

பொதுவாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை கொண்டு செயலாற்ற மற்றவர்களின் விமர்சனம்தான் நம்மை செயலாக்க செய்யும். உங்கள் மீது வந்து விழும் விமர்சனங்களை கண்டு வருத்தம் கொள்ளாமல் தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். நேர்மையான விமர்சனங்களுக்கு தலைவணங்கி, பொய்யான விமர்சங்களை புறக்கணியுங்கள் அது அவர்களின் இயலாமை.

 

விமர்சனம், தாக்குதல், கண்டனம், திறமை பத்தாது, பக்குவமில்லை என்கிற பேச்சுகள் உங்கள் மீது விழும் தூசிகள் என்றே நினையுங்கள். உங்கள் மீது வீசம் அவமானம், கேவலம், நகையாடுதல் போன்றவை உங்கள் வளர்ச்சிக்கு உரமாகும். எப்போது நீங்கள் விமர்சனத்திற்கும், தாக்குதலுக்கும் ஆளாகின்றீர்களோ அப்போதே நீங்கள் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபராக மாறிவிட்டீர்கள், வளர்ந்துவிட்டீர்கள் என்பதே உண்மை.

 

வாழ்க்கையில் முன்னேறிய பலர் விமர்சனத்தையும் பல்வேறு சவால்களையும் சந்தித்தே முன்னேறியுள்ளார்கள். அதை நீங்களும் உணர முற்படுங்கள். தொடர் பயிற்சி, விடாமுயற்சியும் உங்களுக்கு மாலை சூட்டி மகுடம் வைக்கும். ஒரு நேரத்தில் உங்களை விமர்சித்தவர்களே, நான் அப்போதே சொன்னேன்’ என்று நீங்கள் வெற்றியடைந்த பிறகு கூறுவார்கள். விமர்சனங்கள் வாழ்க்கையில் முன்னேறும் படிக்கட்டாகும். வெற்றியின் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்.

author avatar
Jayachandiran