பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

0
294
Kerala Lovers Suicide Case
Kerala Lovers Suicide Case

பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் பகுதியில் வசித்து வரும் கலாதரன் என்பவரின் மகன் அமர்ஜித்.23 வயது நிரம்பிய இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.அதே ஊரில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரின் மகள் கிருஷ்ண பிரியா. 21 வயது நிரம்பிய இவர் விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளம் மற்றும் மொபைல் போன் மூலமாக பேசி அவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணவில்லை என அருகிலுள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் தான் ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலுள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் இருவரும் பெற்றோர்களுக்கு பயந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே காவல்துறையினர் கருதுகின்றனர்.

Previous article4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
Next articleபெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here