சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?
கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது.
பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி வருகின்றது.ஆனால்,கேரளாவில் புதிய விதமாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.தற்போது இணையத்தளத்தினுள் சென்றாலே அதிகப்படியாக பார்க்கபடுவது மற்றும் கேட்கப்படுவது சந்தோஷ் நாராயணின்,இசையில் வெளிவந்த அவரது மகள் தீ பாடிய குக்கூ குக்கூ பாடல் பெருமளவு வைரலானது.
அப்பாட்டை கொரோனா தொற்று விழிப்புணர்வு பாட்டாக மாற்றி,அப்பாடிற்கு கேரளா போலீசார் நடனமாடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இது அதிக அளவு வைரலாகி வருகிறது.அதுமட்டுமின்றி இந்த விழிப்புணர்வு பலரது பாராட்டுக்களை பெற்றது.அதனைத்தொடர்ந்து கேரளா முதல்வர் டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியது,கேரளா,மத்திய அரசிடமிருந்து 73 லட்சத்து 38 ஆயிரத்து 806 டோஸ்களை வாங்கியது.அதில் தற்போது வரை 74 லட்சத்து 26 ஆயிரத்து 164 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் பலர் பல கேள்விகளை எழுப்பினர்.அதில் கொடுத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையே 73 லட்சம் தான் ஆனால் இவர்கள் எப்படி 74 லட்ச தடுப்பூசிகளை போட்டிருக்க முடியும் என குழப்பத்தில் இருந்தனர்.இவ்வாறு பல கேள்விகள் எழுந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அதற்கு விளக்கமளித்தார்.அதில் அவர் கூறியது,தடுப்பூசி செலுத்தும் போது அதிக அளவு வீணாக கூடும்.அதனை ஈடு செய்ய கொடுக்கும் தடுப்பூசிகளையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.அதனால் 74 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்படாமல் போடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் செலுத்திய செவிலியர்கள் மற்றும் சுகாதர பணியாளர்களுக்கு கேரளா முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக நடந்துள்ளது என கூறியுள்ளனர்.