“ஐயப்பன் சீசன்” வருது உங்க ஆளுங்களும் வரணும் நியாபகம் வெச்சுக்கோங்க!! தமிழக அரசை எச்சரித்த கேரளா அமைச்சர்!!
சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளிமாநிலகளிலிருந்து தமிழகத்திற்கு இயங்கி வரும் ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தது.அதாவது அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகள் கீழ் இல்லாமல் விதிகளை மீறி வெளி மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகம் வழியாக பிற மாநிலங்களுக்கு செல்கிறது.குறிப்பாக தமிழகத்தில் இயங்கும் இவ்வகையான ஆம்னி பேருந்துகள் எந்த ஒரு வரியும் செலுத்துவதில்லை.
இதனை கண்டித்ததோடு இவ்வாறான ஆம்னி பேருந்துகள் இனி இயங்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி தமிழக அரசானது, வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலா வரும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு வாரியாக நான்காயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் கூறியது.இது அனைத்து வகையான கனரக வாகனம் எனத் தொடங்கி ஆம்னி பேருந்து வரை பொருந்தும் என்று கூறியது.
இவ்வாறான உத்தரவுக்கு தற்பொழுது கேரளா அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரளா சட்டசபையில் இதுகுறித்து அமைச்சர் கணேஷ்குமார் கூறியுள்ளதாவது, தமிழக தங்களிடம் அரசு எந்த ஒரு ஆலோசனையுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா ஆம்னி பேருந்துகளுக்கு ₹4000 ஆக வரியை செலுத்தும் படி கூறியுள்ளது.இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.அதேபோல தற்பொழுது ஐயப்பன் சீசன் ஆரம்பமாக உள்ளதால் தமிழகத்திலிருந்து தான் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.வரி உயர்வை எதிர்க்கும் விதமாக தற்பொழுது நாங்களும் இதே போல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு பரிந்துரை செய்யும் படியும் கேட்டுள்ளார்.