கேரளா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!!

0
93
Kerala: Opening of Sabarimala Ayyappan temple today!!
Kerala: Opening of Sabarimala Ayyappan temple today!!

கேரளா: வருடதோரும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து திருப்புகின்றனர்.

இருப்பினும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு  92,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். தற்போது மண்டலபூஜை முடிந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மேலும் வழக்கம் போல நாளை காலை 3 மணிக்கு நடைதிறக்கபடும். வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். மேலும் மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை நடைப்பெறும் அதன் பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திரும்ப நடை திறக்கப்படும்.

அதனை தொடர்ந்து மாலை 6.30 மைக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.  இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜை அடுத்த மதம்    14-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் படி அன்று மாலை மகர ஜோதி தரிசனம் நடைப்பெறும். இந்த மாதம் 18-ம் தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம். மேலும்  19-ம் தேதி இரவு வரை பத்தர்கள் சாமீ தரிசனம் செய்யலாம்.

Previous articleஅதானி டெண்டரே வேண்டாம்.. தமிழக மின்வாரியம் எடுத்த தடாலடி முடிவு!!
Next article71 பேரை காவு வாங்கிய ஆற்று பாலம்!! திருமணத்திற்கு சென்றவர்கள் பலியான சோகம்!!