Kerala Recipe: வாயில் வைத்ததும் கரையும் ‘பால் ஆப்பம்’!! இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

Photo of author

By Divya

Kerala Recipe: வாயில் வைத்ததும் கரையும் ‘பால் ஆப்பம்’!! இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

ஆப்பம் பலருக்கு பிடித்த உணவு ஆகும்.இதில் ராகி ஆப்பம்,அரிசி ஆப்பம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் பால் ஆப்பம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சரிசி – 1 கப்
2)இட்லி அரிசி – 1 கப்
3)வெந்தயம் – 1 தேக்கரண்டி
4)வெள்ளை உளுந்து – 1/4 கப்
5)தேங்காய் பால் – 1 கப்
6)முந்திரி – 1/4 கப்
7)பாதாம் – 1/4 கப்
8)உலர் திராட்சை – 1/4 கப்
9)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
10)பால் – 1 கப்
11)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
12)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பச்சரிசி,இட்லி அரிசி,உளுந்து பருப்பு மற்றும் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.அரிசி கலவை நன்கு ஊறி வந்த பின்னர் நீரை வடிகட்டி விட்டு அரிசி + உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.

அதன் பின்னர் 1/2 கப் தேங்காய் பால் ஊற்றி மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு ஆப்ப கடாய் வைத்து ஆப்ப மாவை ஊற்றவும்.பிறகு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி ஆப்பம் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.

இதனிடையே முந்திரி,பாதாமை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து நறுக்கிய முந்திரி,பாதாம்,உலர் திராட்சையை போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை சுட்டு வைத்துள்ள ஆபத்திற்குள் போட்டு பால் மற்றும் தேங்காய் பால் ஊற்றி ஊறவைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.