Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி?

அதிக சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்று வெந்தயக் கீரை.குளிர்ச்சி நிறைந்த இந்த வெந்தயக் கீரையில் சுவையான பொரியல் அதுவும் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயக் கீரை – 1 கட்டு
*தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*பச்சை மிளகாய் – 4
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் – 1/4 கப்
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

ஒரு கட்டு வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு 1/4 கப் அளவு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு கடுகு,சீரகம் போட்டு பொரிய விடவும்.பிறகு கறிவேப்பிலை,நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெந்தயக் கீரையை போட்டு வதக்கவும்.கீரை நன்கு வெந்து வருவதற்காக சிறிது தண்ணீர் ஊற்றவும்.

5 நிமிடங்கள் வரை வேக விட்டு பின்னர் துருவிய தேங்காயை கொட்டி கிளறவும்.2 நிமிடங்களுக்கு கிளறி இறக்கினால் சுவையான வெந்தயக் கீரை பொரியல் ரெடி.