Kerala Recipe:கேரளா ஸ்டைல் நிம்பு ஜூஸ் – சுவையாக செய்வது எப்படி?
ஒரு வித்தியாசமான ஜூஸ் செய்து குடிக்க ஆசையா? அப்போ கேரளா மக்கள் விரும்பி அருந்தும் நிம்பு ஜூஸ் செய்து குடிங்கள்.இவை உடலுக்கு ஆரோக்கியத்தையும்,குளிர்ச்சியையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி
3)இஞ்சி துருவல் – 1/2 தேக்கரண்டி
4)புதினா – 10 இலை
5)நாட்டுச் சர்க்கரை – 4 தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
7)எலுமிச்சை தோல்(துருவியது) – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி காய்கறி சீவல் கொண்டு சீவி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.
இந்த எலுமிச்சம் பழ தோலை காய்கறி சீவல் கொண்டு சீவி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சீவி வைத்துள்ள இஞ்சி,எலுமிச்சை தோல் மற்றும் தேங்காய் துருவலை போட்டுக் கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி ஒரு கப் குளிர்ந்த நீர் ஊற்றி கலந்து விடவும்.
பிறகு அதில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை போட்டு கலந்தால் சுவையான நிம்பு ஜூஸ் தயார்.