கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி?

0
177
#image_title

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி?

வீட்டு விசேஷங்களில் மலபார் மக்கள் வழங்கும் கூல் ட்ரிங்க்ஸ்.. சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*பால் – 1/2 லிட்டர்
*சர்க்கரை – 1/2 கப்
*ப்ரஸ் க்ரீம் – 1/4 கப்
*வறுத்த சேமியா – 1/4 கப்
*சப்ஜா விதை – 1 ஸ்பூன்
*மாதுளை – 1/2 கப்
*ஆப்பிள் – 1/2 கப்
*முந்திரி(நறுக்கியது) – 1/2 கப்

செய்முறை…

அரை லிட்டர் அளவு கெட்டி பால் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

பிறகு அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் ப்ரஸ் க்ரீம் சேர்க்கவும். இவை சூடாகும் போது 1/4 கப் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து கிளறவும். வறுக்காத சேமியாவை சேர்த்தால் சுவைக்க நன்றாக இருக்காது.

பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து பாலை ஆற விடவும். நன்கு ஆறிய பின்னர் இதை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.

அடுத்து 1 ஸ்பூன் சப்ஜா விதையை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

பிறகு மாதுளை விதை 1/2 கப் அளவு, ஆப்பிள் நறுக்கியது 1/2 கப் அளவு, முந்திரி 1/2 கப் நறுக்கியது… மற்றும் ஊறவைத்த சப்ஜா விதை… இதை அனைத்தையும் ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டு குளிர்ந்த பாலை அதில் ஊற்றி கலந்து விடவும்.

பிறகு இதை கிளாஸில் ஊற்றி குடிக்கவும். இவை சத்து நிறைந்த கூல் ட்ரிங்க்ஸ்.. குடிக்க மிகவும் சுவையாக இருக்கும்.