கேரளா ஸ்பெஷல் முப்புளி கறி ரெசிபி!

Photo of author

By Divya

கேரளா ஸ்பெஷல் முப்புளி கறி ரெசிபி!

கேரளா பாரம்பரிய முப்புளி கறி ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*புளி – நெல்லிக்காய் அளவு
*தயிர் – 3/4 கப் அளவு
*பச்சை மாங்காய் – 1
*வாழைக்காய் – 1
*வெள்ளை பூசணி – 1 கப் அளவு
*மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
*தேங்காய் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
*வெந்தயம் – 1/4 ஸ்பூன்
*உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
*பொன்னி அரிசி – 1 ஸ்பூன்
*வர மிளகாய் – 3
*கறிவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
*பச்சை மிளகாய் – 2
*உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கிய வாழைக்காய், நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் அதில் வெந்தயம், வெள்ளை உளுந்து, பொன்னி அரிசி, வரமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு தயிர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து வெந்து கொண்டிருக்கும் காய்கறியில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

காய்கறி நன்கு வெந்து வந்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்து கிளறி விடவும்.

பிறகு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு கொதிக்கும் முப்புளி கறியில் சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். இந்த முப்புளி கறி சூடனான சாதத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும்.