கேரளா ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Photo of author

By Divya

கேரளா ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

நம்மில் பலருக்கு பிடித்த அசைவ உணவு மீன். இவை உடலுக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விட மீனில் ஒமேகா 3 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கிறது. இந்த மீனை வைத்து கேரளா ஸ்டைலில் அரைச்சு வச்ச மீன் குழம்பு செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மீன் – 1/4 கிலோ

*தேங்காய் – 1/2 கப்

*தேங்காய் எண்ணெய் – 50 கிராம்

*கடுகு – சிறிதளவு

*வெந்தயம் – சிறிதளவு

*தக்காளி – 1

*மிளகாய் தூள் – 1 சிட்டிகை அளவு

*மஞ்சள் தூள் – 1 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள், 1 சிட்டிகை அளவு மிளகாய் தூள், 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து 1/4 கிலோ மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 50 கிராம் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் கடுகு, வெந்தயம் சிறிதளவு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கலந்து விடவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் மீன் குழம்பு அதிக ருசியுடன் இருக்கும்.