கேரளா ஸ்டைல் ரெசிபி: “நேந்திரங்காய் கஞ்சி” இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!
நேந்திர வாழைக்காயை காயவைத்து பொடி செய்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சி வதை கேரள மக்கள் நேந்திரங்காய் கஞ்சி என்று கூறுகிறார்கள். இவை அதிக சத்து மற்றும் வாசனை நிறைந்த இனிப்பு உணவு ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*நேந்திர வாழை – 1
*பால் – அரை கப்
*வெள்ளை சர்க்கரை – 4 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு பச்சை நேந்திர வாழை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதை நிழலில் உலர்த்தி எடுத்து ஒரு காற்றுபுகா டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
நேந்திரங்காய் கஞ்சி செய்ய காயவைத்து சேமித்து வைத்துள்ள நேந்திரங்காய் துண்டுகளில் சிறிதளவு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் இதை நன்கு பொடித்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். அடுத்து அரைத்து வைத்துள்ள நேந்திரங்காய் பொடியை சேர்த்து கலந்து விடவும். பிறகு 1/2 கப் பால் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்வது முக்கியம். நேந்திரங்காய் பொடி + பாலின் பச்சை வாசனை நீங்கிய பின் தேவையான அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சர்க்கரை கரைந்து வந்த பின் அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் ஊற்றி பருகவும்.