தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

Photo of author

By Parthipan K

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

Parthipan K

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்வப்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்வப்னா வெளிநாடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளை செய்யும் நடிகர்களை அழைத்து செல்லும் வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை  கடத்தும் தொழிலையும் சேர்த்து பார்த்துள்ளார்.

இதன் பின்னணியில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்வப்னாவிடம் நடந்த சிபிசிஐடி விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் கடத்தி வந்த தங்கத்தை திருச்சியை சேர்ந்த விஐபி இடம் விட்டதாகவும் இதுகுறித்து அந்த விஐபி தன்னுடைய பெயர் வெளியில் தெரியாதபடி போலீசிடம் கெஞ்சியதாகவும் , அந்த  விஐபிக்குஅரசியல் பின்புலம் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.