முல்லைப் பெரியாறு அணை! என்ன முடிவு எடுக்கப் போகிறது உச்சநீதிமன்றம்?

0
83

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் தண்ணீரால் கீழ்ப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் விதத்திலும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் நடந்துகொள்ள கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும், நீர் திறப்பு தொடர்பாக முடிவு செய்வதற்கு இரண்டு மாநில அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும், அணையிலிருந்து இரவு நேரத்திற்கு பதிலாக பகலில் மட்டுமே தண்ணீரை திறந்துவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை தினம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது, அந்த மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப் படலாம் என சொல்லப்படுகிறது.