தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்!

Photo of author

By Parthipan K

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்!

கேரளா மாநிலத்தில் கண்ணூரைச் சேர்ந்த 40 வயதான பெண்ணும் அவரது கணவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு முருகனின் தரிசனத்தை பெறுவதற்காகப் பழனிக்கு சென்றிருக்கிறார்கள், பழனி விடுதியில் தங்குவதற்காக முன்பதிவும் செய்திருக்கிறார்கள். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த 3 பேர் அப்பெண்ணின் கணவனை அடித்த விரட்டி விட்டு அங்குள்ள ஒரு விடுதியில் அப்பெண்ணை பூட்டி வைத்துள்ளார்கள்.

பின்னர் அன்று இரவு முழுவதும் அந்த 3 நபர்களும் மாறி மாறி அந்தப் பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பிறகு அப்பெண்ணின் உடல் நிலை மோசமானதால் கேரளாவில் கண்ணூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது கணவர் அந்தப் பெண்னின் சிகிச்சையின்போது என்னை மூன்று நபர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் கண்ணூர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்திருக்கின்றனர், அப்போது அங்கு வந்த போலீசார் அவரது கணவனிடம் விசாரித்த போது பழனி காவல்துறையில் புகார் கொடுக்கவில்லையா என்று காவல் துறையினர் கேட்டனர். அதற்கு அந்த கணவன் நாங்கள் தகவல் கொடுத்தோம் ,ஆனால் எந்த முயற்சியும் காவல்துறை எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து கண்ணூர் போலிசார்,பழனி காவல் துறையைத் தொடர்புக் கொண்டபோது சம்பவத்தன்று அந்த தம்பதிகள் தங்களது உடைமைகளை காணவில்லை என்றுதான் புகார் கொடுத்ததாக பழனி காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து தம்பதிகள் தங்கியிருந்த விடுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் பழனி போலீசார்,விடுதியில் பணியாற்றி வருபவர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.