தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

0
130

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தளர்த்தப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மற்றும் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleதிருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!
Next articleகொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!