கேஜிஎப்2 திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Photo of author

By Parthipan K

கேஜிஎப் திரைப்படம் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இந்த திரைப்படம் கன்னடம்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படதிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.

கேஜிஎப் படம் வெற்றி பெற்றதால் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.கேஜிஎப்2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.எப்போது படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் கேஜிஎப்2 திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.ஏற்கனவே திரையரங்கம் திறக்கபடாததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.இந்நிலையில் கேஜிஎப்2 படமும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.இதனால் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனிடையே பிரபல ஓடிடி தளம் ஒன்று கேஜிஎப்2 திரைப்படத்தை 250 கோடிக்கு விலைக்கு கேட்டதாக படக்குழு தெரிவித்தது.ஆனால் படக்குழு இதனை நிராகரித்துவிட்டது.திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று பகிரங்கமாக கூறிவிட்டனர்.கொரோனா கட்டுப்பாடுகள் தளவுற்றால் மட்டுமே திரையரங்கம் திறக்கப்படும்.பல மாநிலகளில் இன்னும் கொரோனா நோய் கட்டுப்படாமல் இருப்பதால் இப்போதைக்கு திரையரங்கங்கள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஆனாலும் படக்குழு சலிப்படையாமல் காத்துக்கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.இந்த வருடத்திற்குள் கேஜிஎப்2 திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.முதல் பாகத்தில் உள்ள அனைத்து அம்சமும் இரண்டாம் பாகத்திலும் இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.