லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!

0
157

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!

கமல்ஹாசன் நடித்த KH233 படமானது விஜய் நடித்த லியோ படத்தின் சாதனையை சத்தம் இல்லாமல் நெருங்கியுள்ளது.

1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார். ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா போன்றோர் நடித்து இருந்தனர். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது  கமல்ஹாசனே இந்த படத்திலும் நடித்து வருகிறார். அதன்பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் எச். வினோத் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பானது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கே ஹெச் 23 டிஜிட்டல் உரிமையை 125 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் இளைய தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போது கமலின் படமும் அதே விலைக்கு விற்பனையாக்கி உள்ளது. இதன் மூலம் அசால்டாக லியோ சாதனையை கமல்ஹாசன் நெருங்கியுள்ளார். தற்போது இந்த டாபிக் தான் இணையத்தில் ஹாட்டாக வைரலாகி வருகிறது.

Previous articleதாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!
Next articleதனுசுக்கு அந்த பழக்கம் இருந்தது பொது இடத்தில் அளித்த பேட்டியில் உண்மையை உளறிய ரோபோ சங்கர்!!