கமல்ஹாசன் பிறந்தநாளில் தொடங்குகிறது KH233 திரைப்படம்!!! அப்போ பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!?
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கவுள்ள 233வது திரைப்படமான கே.ஹெச்233 திரைப்படம் பற்றிய முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய 234வது படமான கே.ஹெச்234 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் கே.ஹெச்233 திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இயக்கவுள்ளார் என்று படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வீடியோ மூலமாக தெரிவித்தனர்.
கே.ஹெச் 233 திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த கே.ஹெச்233 திரைப்படம் இராணுவ வீரர் தொடர்பான கதை என்பதால் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து கே.ஹெச் 233 திரைப்படத்தின் பிரி புரொடக்சன் வேலைகள் சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கே.ஹெச் 233 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து சிறிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது கே.ஹெச் 233 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிற்பகல் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கவுள்ளது.
வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் கே.ஹெச் 233 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நவம்பர் 7ம் தேதி தொடங்குவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக கலந்து கொள்ளமாட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் கே.ஹெச் 233 திரைப்படத்தின் ஷூட்டிங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கிலும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மாறி மாறி கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.