இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5வது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கொன்ஸ்டாஸ் பும்ராவை சீண்டி உள்ளார்.இதனால் கவாஜா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில் 5 வது போட்டி இன்று தொடங்கியது. முதலில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சொதப்பலான பேட்டிங் காரணமாக 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிய குறைந்த நேரமே இருந்த நிலையில் தொடக்க வீரரகலாக கவாஜா மற்றும் கொன்ஸ்டாஸ் இருவரும் களமிறங்கினர். இதில் கவாஜா பேட்டிங் செய்ய கொன்ஸ்டாஸ் எதிர்முனையில் இருந்தார். அவர் நேரம் முடிய நேரம் கடத்த முயன்றதாக பந்து வீசிய பும்ரா கோபத்தில் சைகை காட்டினார். அதற்கு கொன்ஸ்டாஸ் பும்ராவை சீண்டினார். கோபத்தில் அடுத்து வீசிய பந்தில் கவாஜா அடித்த பந்து ஸ்லிப் நின்ற கே எல் ராகுல் கேட்ச் பிடிக்க அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனை வம்பிழுத்து அவரை அவுட் ஆக்கிவிட்டார் கொன்ஸ்டாஸ் என்று பதிவிட்டு வருகின்றனர்.