கோலிக்கு “shutup”சொன்ன வில்லியம்ஸ்

Photo of author

By CineDesk

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசியதும் செக் புக்கில் கையெழுத்திடுவது போல் நோட்புக் சைகை வெளிப்படுத்தினார்.

கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும்போது வில்லியம்ஸ் அவ்வாறு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் செய்தேன் என்றார்.

நேற்று முன்தினம் 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியதும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வாயை மூடுங்கள் என்று சைகை காட்டினார். விராட் கோலி அடிக்கடி எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது அப்படி செய்வார். அதனால் வில்லியம்ஸ் விராட் கோலிக்கு எதிராக அப்படி செய்துள்ளார்.