குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

0
34
#image_title

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியான படம் குஷி.இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகை சமந்தா ஜோடியாக நடித்துள்ளார்.மகாநதி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா ,விஜய் தேவரகொண்டா ஜோடி மீண்டும் குஷி படத்தில் இணைந்துள்ளது.படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ரீல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் குஷி படத்தை இயக்குநர் சிவா நிர்வணா இயக்கியிருக்கிறார்.தமிழில் மெட்ராஸ்,காலா, சர்பேட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி தான் இந்த குஷி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் தெலுங்கு,தமிழ்,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.அந்தவகையில் ‘குஷி’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.