குஷி படத்தின் ட்ரெயிலர் தேதி வெளியீடு!! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!!

0
39
Khushi trailer release date!! Officially announced by the crew!!
Khushi trailer release date!! Officially announced by the crew!!

குஷி படத்தின் ட்ரெயிலர் தேதி வெளியீடு!! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!!

விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.இவர் 2011 ம் ஆண்டு நுவ்விலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் நடித்தன் மூலம்  இளைஞர்களிடையே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார்.

அதன் பிற்கு அவர் தான் நடிக்க உள்ள அனைத்து கதாபாத்திரத்திலும் மிகவும் கவனமாக இருந்தார்.இவர் ஹீரோவாக மட்டுமலாமல் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் அதிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.அதன்படி தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த மாகநதி என்னும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்தார்.

அதன் படி தற்பொழுது விஜய் தேவரகொண்டா இறுதியாக நடித்த படம் குஷி.இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா அவர்கள் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் ஜெயராம் ,சச்சின் கெடகர்,முரளி ஷர்மா ,ரோகினி ,வெண்ணிலா கிஷோர் ,ராமகிருஷ்ணா ,ஸ்ரீகாந்த் ,சரண்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் ஹைதராபாத் ,ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

காதலை மையப்படுத்தி கதைகளம் அமைத்து எடுக்கப்பட்ட இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

author avatar
Parthipan K