சிறுநீரகத்தில் இருக்கின்ற கற்களை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
கிட்னி ஸ்டோன் அறிகுறிகள்:
**சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்
**சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
**சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
**சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரிய நிலை ஏற்படுதல்
**இடுப்பு அல்லையில் வலி ஏற்படுதல்
கிட்னி ஸ்டோனை கரைக்கும் வீட்டு வைத்தியங்கள்:
1)பீன்ஸ்
இந்த காயில் புரதம்,இரும்பு,நார்ச்சத்து,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.முதலில் தரமான பத்து பீன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் ஒரு கப் அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.தண்ணீர் நன்றாக சுண்டி கால் லிட்டராக வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இந்த பீன்ஸ் பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி பருகி வந்தால் கிட்னி கற்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்.
பீன்ஸ் பானம் பருகி வந்தால் இதயம்,கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
2)நூல்கூல்
மருத்துவ குணம் நிறைந்த காய்களில் ஒன்று நூல்கூல்.இந்த காயில் மாங்கனீஸ்,வைட்டமின்கள்,பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.நூல்கூல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நூல்கூல் சாப்பிடுவதால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுவது கட்டுப்படுகிறது.இந்த நூல்கூளை சாப்பிட்டு வந்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நூல்கூல் பானம் கிட்னியில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றுகிறது.இந்த நூல்கூலை சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு 500 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குறைவான தீயில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு இந்த பானத்தை வடிகட்டி பருகினால் கிட்னி கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.
3)முள்ளங்கி
இதில் நார்ச்சத்து,பொட்டாசியம் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த முள்ளங்கியை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அரை லிட்டராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானத்தை சிறிது ஆறவைத்து பெருகி வந்தால் கிட்னியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.