கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு

0
429

கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு

கிட்னியில் கல் / சிறுநீரக கல் உருவாவது எப்படி:

நம் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது கிட்னி. ரத்தத்தைக் சுத்திகரித்து, கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியை கிட்னி செய்கிறது. சில நேரம் நீர் சத்து குறைபாட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் அங்கேயே தங்கி விடும். இவை நாளடைவில் கிட்னியில் கற்களாக மாறிவிடுகிறது.

கிட்னியில் யாருக்கெல்லாம் கல் உருவாகும்:

யாருக்கு வேண்டுமானாலும் கிட்னியில் கற்கள் வரலாம். ஆனால், பெண்களை விடவும் ஆண்களுக்கே கிட்னியில் கல் வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. குடும்பத்தில் யாருக்காவது கிட்னியில் கல் இருந்தால் வாரிசுகளுக்கும் கல் வரலாம். போதுமான அளவு நீர் குடிக்காததாலும் கிட்னியில் கற்கள் வர வாய்ப்பு உண்டு. உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், கிட்னியில் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்:

மூட்டுகளில் உள்ள இணைப்புகளில் வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலும் கிட்னியில் கற்கள் வருவதற்கான அறிகுறி தான் இது. சில ஸ்டீராய்டு மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளும் போது கிட்னியில் பாதிப்பை ஏற்படுத்தும். கிட்னியில் கல் வந்தால் உடனே அறுவை சிகிச்சை தான் தீர்வு அல்ல. சில சிறிய கற்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம், சிறுநீர் வழியாகவே வெளியேறிவிடும்.

பெரிய அளவிலான கற்கள் கிட்னியில் இருந்தால், சில அறிகுறிகளை வைத்து, கண்டுபிடித்துவிடலாம். சிறுநீர் கழிக்கும் போது மிகுதியான வலி, அடி வயிறு மற்றும் பின் முதுகில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். சிறு நீரில் ரத்தம் வெளியேறுதல் திடீரென குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுதல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறலாம்.

சிறுநீரக கல் நீக்கும் சிகிச்சை 

சிறு நீரக கற்களின் அளவைக் கொண்டு, அவற்றை எளிமையான சிகிச்சை மூலம் சரி செய்யலாம். நிறைய நீர் அருந்துவதன் மூலம் சில நேரங்களில் கற்கள் தானாகவே வெளியேறிவிடும்.

அவ்வாறில்லாமல் கற்கள் பெரிய அளவில் இருப்பின், லித்தொடிரிஸ்பி முறை மூலம் அகற்றப்படும். இந்த சிகிச்சையில் சிறுநீர் பாதையின் வழியாக மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, கற்களை சில துண்டுகளாக உடைத்து சிறுநீர் மூலம் கற்கள் வெளியேற்றப்படும். இந்த சிகிச்சை மேற்கொள்ள சுமார் 1 மணி நேரம் ஆகும். மயக்க மருந்து கொடுத்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இன்னொரு முறை யுரிட்டிரோஸ்கோபி. இந்த முறையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து பின், சிறுநீர் பாதை வழியாக சிறு குழாய் செலுத்தப்பட்டு, சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு கற்களை வெளியே எடுப்பார். இந்த முறையில் கற்களை உடைக்க லேசர் பயன்படுத்தப்படும்.

இந்த இரு சிகிச்சையிலும் கற்கள் வெளியே எடுக்க முடியாத போது, அறுவை சிகிச்சையின் மூலம் கற்கள் நீக்கப்படும்.

சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

தினமும் இரண்டு லிட்டர் நீர் கட்டாயம் குடிக்க வேண்டும். நார் சத்துள்ள உணவுகளை முடிந்த அளவு சாப்பிட வேண்டும். இறைச்சி, முட்டை வகைகளை முடிந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை கிட்னியில் கற்கள் சேராமல் பாதுகாக்கும். எதுவாகினும் மருத்துவரின் ஆலோசனையின்றி, சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இவை பேராபத்தை ஏற்படுத்தும்.

Previous articleகணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?
Next articleபெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு