ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!!

0
47
King of comedy giving re-entry!! There is no dearth of comedy anymore!!
King of comedy giving re-entry!! There is no dearth of comedy anymore!!

ரீ-என்ட்ரி கொடுக்கும் நகைச்சுவை மன்னன்!! இனி காமெடிக்கு பஞ்சமே இல்லை!!

தமிழ் சினிமாவில் என்பது, தொண்ணூறு காலங்களில் கவுண்டர் கிங் ஆக ரசிகர்களின் மனிதில் நீங்க இடம் பிடித்த ஒருவர் தான் கவுண்டமணி ஆவார். இவர் தற்போது நடிப்பதில்லை என்றாலும், இவருக்கென்று இருக்கின்ற ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் இருக்கிறது.

இவர் பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2016  ஆம் ஆண்டு “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே, இவரின் அடுத்த படத்திற்கு அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், இவரின் அடுத்த அதிரப்ப்டம் தற்போது வெளியாக இருக்கிறது.

முழுவதுமாக நகைச்சுவை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் படத்திற்கு “ஒத்த ஓட்டு முத்தையா” என்ற பெயரிடப்பட்டு, அதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்க இருக்கிறார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ரீஜெந்திரன், தம்பி ராமியா, சிங்கம்புலி, வையாபுரி, ரவிமரியா உள்ளிட்ட பல நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தை இயக்கும் சாய் ராஜகோபால் கூறி இருப்பதாவது, ஒந்த ஒத்த ஒட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் கூறிய உடனேயே அவர் உடனடியாக சரி என்று கூறி விட்டார்.

மேலும், இத்திரைப்படம் சிறியவர்கள் முதல பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம் என்று கூறி இருக்கிறார்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் மற்றும் கிச்சா வயசு போன்ற திரைப்படங்களை சாய் ராஜகோபால் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk