காதல் உறவில் முத்தம் கொடுப்பது என்பது அன்பை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாக திகழ்கிறது.ஆண் மற்றும் பெண்ணை இணைக்கும் பலமாக முத்தம் உள்ளது.உறவுகளில் பிணைப்பை ஏற்படுத்தும் முத்தம் அன்பை அதிகரிக்க மட்டுல்ல உடலில் உள்ள நோய்களை குணமாக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.அழகான,ஆழமான முத்தம் மன அழுத்தத்திற்கு மருந்தாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1)தங்கள் துணைக்கு தினமும் 2 நிமிடங்கள் முத்தம் கொடுத்தால் இரத்த அழுத்தம் குறையும்.
2)உடலில் இருக்கின்ற கலோரிகளை குறைக்க முத்தம் கொடுக்கலாம்.5 நிமிடங்கள் முத்தம் கொடுத்தால் உடலில் 130 கலோரிகள் குறையும்.
3)தினமும் முத்தம் கொடுப்பதால் மன அழுத்தம் ஹார்மோன்களின் அளவு குறையும்.
4)முத்தம் கொடுப்பதால் ஒரு நிமிடத்திற்கு 26 கலோரிகள் வரை குறைக்க முடியும்.எளிதில் கலோரிகளை குறைக்க உதவுவதால் உங்கள் துணைக்கு தினமும் 10 நிமிடங்கள் முத்தம் கொடுத்து வந்தால் உடல் எடை எளிதில் குறைந்துவிடும்.
5)ஆழ்ந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறையும்.இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் முத்தத்தின் மூலம் தீர்வு காணலாம்.
6)நீண்ட நேரம் முத்தம் கொடுப்பதால் உமிழ்நீரின் ஓட்டம் அதிகரித்து வாய் ஆரோக்கியம் மேம்படும்.
7)தினமும் முத்தம் கொடுப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.
8)முத்தம் கொடுப்பதால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
9)உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்க தங்கள் துணையுடன் முத்த விளையாட்டில் ஈடுபடலாம்.