கிச்சன் கைட்! அசத்தல் டிப்ஸ்! இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்!

0
96

கிச்சன் கைட்! அசத்தல் டிப்ஸ்! இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்!

பல இல்லத்தரசிகளுக்கு சிறு சிறு குறிப்புகள் தற்போது வரை தெரியாமலே இருக்கும். அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினால் அவ்வுணவு மிகவும் ருசியாக மாறிவிடும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து உணவுகளில் சேர்ப்பது வழக்கம். அவ்வாறு சேர்க்கும் பொழுது சிறிதளவு ஓமம் கலந்து கொள்ள வேண்டும். அவர் சேர்ப்பதால் நன்கு செரிமானம் ஆகும் மற்றும் நல்ல மனத்துடனும் அவ் உணவு இருக்கும். சோள மாவில் பலகாரமும் அல்லது சப்பாத்தி பூரி செய்யும் பொழுது சிறிதளவு ஓமம் சேர்க்க சுவை கூடும்.

சிலருக்கு முட்டை வாடை பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு முட்டையை வறுக்கும் பொழுதே சிறிதளவு கொத்தமல்லியை நன்றாக கசக்கி சேர்த்துக் கொண்டால் முட்டை வாடை நீங்கிவிடும். புட்டு செய்யும் பொழுது மாவின் பச்சை வாசம் வரும். அவ்வாறு வராமல் இருக்க புட்டுக்கு அரிசியை ஊற வைக்கும் முன்பே தனியாக வானலில் மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை அரைத்து புட்டு செய்தால் மாவின் பச்சை வாசனை வராது. ஒவ்வொரு முறையும் ஜாம் ஊறுகாய் நெய் ஆகிய மோடிகள் திறக்க முடியாமல் டைட்டாக இருந்தால் மூடியின் விளிம்பில் ஒரு ரப்பரை மாட்டி விடலாம். அடுத்த முறை திறக்கும் பொழுது மிகவும் சுலபமாக இருக்கும். இதுபோல சில சில மாற்றங்களை சமையலறையில் ஏற்படுத்தினால் உணவு மிகவும் ருசியாக இருக்கும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.