ராஜஸ்தானை தும்சம் செய்து..ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கொல்கத்தா அணி.!!

0
143

நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இதில், ராஜஸ்தான் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா அணி.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஷார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் பைல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களமிறங்கிய சுமன் கில் 52 ரன்களும், வெங்கடேச ஐயர் 38 ரன்களும் எடுத்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.

இதனை அடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லிவிங்ஸ்டன் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ௧ ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அடுத்த சில நிமிடங்களில் லிவிங்ஸ்டன் 6 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த சிவம் துபே 18 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் விக்கெட்டை இழந்து வெளியேறினர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 16 .1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் சிவம் மாவி 4 , லோக்கி பர்குஸன்ன் 3 , வருன் சக்ரவர்த்தி , ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலம் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதன் மூலம் கொல்கத்தா அணி ப்ளே ஆப்பில் விளையாட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Previous articleஇன்றைய (08-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு எப்படி இருக்கும்.?
Next articleஇந்த மாணவர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்! வகுப்புகளில் இருக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லலாம்!