இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த சாதனையை இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் இந்த சாதனையை டிராவிட்-சேவாக் செய்திருந்தனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய 150 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் சேர்த்தது.
இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் இணை இதற்கு முன் முதல் விக்கெட் க்கு 123 ரன்கள் சேர்த்தது. அந்த சாதனையை உடைத்துள்ளது கே எல் ராகுல்-ஜெய்ஸ்வால் இணை.
மேலும் இதன் மூலம் கே எல் ராகுல் சாதனை ஒன்றை செய்துள்ளார். இதுவரை கே எல் ராகுல் SENA எனப்படும் தென்னாபிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் மூன்று முறை துவக்க வீரராக 100 ரன்களுக்கும் மேற்பட்ட கூட்டணியில் இடம் பெற்று சாதனை படைத்தார்.