கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் அடிப்படை விலை!!  பஞ்சாப் அணி வாங்க நினைக்கும் முக்கிய வீரர்??

Photo of author

By Vijay

IPL:  முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீர்களின் அடிப்படை விலை வெளியானது.

டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், லக்னோ ஆகிய அணிகள் தங்கள் நடப்பு கேப்டன்களை தக்கவைக்காமல் விடுவித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது அதில் எதிர்பாரா திருப்பமாக 5 அணிகளின் கேப்டன்கள் தக்கவைக்க படாமல் விடுவிக்கப்பட்டனர். இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் முக்கிய வீரர்களான கே எல் ராகுல், ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றால் அவர்களின் ஆரம்ப விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏலத்தில் ஆரம்ப விலை ரூ .2 கோடி , இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் முதல் முறை ஐ பி எல் போட்டியில் பதிவு செய்துள்ளார். அவர் ரூ 1.25 கோடி எனவும், சர்ப்ராஸ் கான் மற்றும் பிரித்வி ஷா ரூ.75 லட்சம் பதிவு செய்துள்ளார்.

ஐ பி எல் ஏலத்தில் அதிக தொகையை பஞ்சாப் அணி ரூ.110 கோடியும்,பெங்களூர் அணி ரூ.83 கோடி, டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.73 கோடி, குஜராத் மற்றும் லக்னோ அணி ரூ.69 கோடி, சென்னை அணி ரூ.55 கோடி, மும்பை மற்றும் ஹைதராபாத் அணி ரூ.45 கோடி, கொல்கத்தா அணி ரூ.51 கோடி, ராஜஸ்தான் அணி ரூ.41 கோடி வைத்துள்ளது. பஞ்சாப் அணி அதிக தொகையுடன் உள்ளதால்  ரிஷப் பண்ட் அல்லது ஸ்ரேயர்ஸ் ஐயர் இருவரில் ஒருவரை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.