சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கே எல் ராகுல்!! வெளியானது ஸ்டீபன் பிளமிங்கின் திட்டம்!!

Photo of author

By Vijay

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கே எல் ராகுல்!! வெளியானது ஸ்டீபன் பிளமிங்கின் திட்டம்!!

Vijay

KL Rahul in the Chennai Super Kings team

IPL: சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கே எல் ராகுலை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

சி எஸ் கே அணி நிர்வாகம்  அணியின் நட்சத்திர வீரரான எம் எஸ் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷரை வாங்குவதற்காக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.  CSK அணியின் பயிற்சியாளர் பிளெமிங் நட்சத்திர வீரரான கே எல் ராகுலை வாங்க திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துருவ் ஜூரல் இருவரையும் டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

ஐ பி எல் மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆணியும் வெளியிட வேண்டும் என அறிவித்தது பிசிசிஐ. அதற்கு நாளை கடைசி நாள் அனைத்து அணிகளும் நாளை எந்த வீரர்கள்  தக்க வைக்க படுவார்கள் என அறிவிக்க உள்ளது.

 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் ஓய்வு பெற்ற வீரர்கள் அன்கேப்ட் வீரர்கள் என் கருதலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த வகையில் சி எஸ் கே அணி வீரரான எம் எஸ் தோனியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் லக்னோ அணியின் கே எல் ராகுலை அந்த அணி வெளிவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2022 ம் ஆண்டு டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியுற்ற போதிலும் CSK அணியின் பயிற்சியாளர் பிளமிங் கே எல் ராகுலுக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதனால் ராஜஸ்தான் அணியின் துருவ் ஜூரல் மற்றும் கே எல் ராகுல் இருவரையும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.