கே எல் ராகுல் தான் தொடக்க வீரர்!! மறைமுகமாக உளறிய தலைமை பயிற்சியாளர் கம்பீர்!!

Photo of author

By Vijay

cricket : தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இருவரில் யார் தொடக்க வீரர் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கம்பீர்.

இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியான நிலையில் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கம்பீர்.

இந்தியா நியூசிலாந்து பின் கேப்டன் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலி மற்றும் பலர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் பிசிசிஐ தலைமையில் மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 6 மணி நேரம் விவாதம் தொடர்ந்தது.அதன் பின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் கம்பீர்.

அதில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடாத பட்சத்தில் யார் விளையாடுவர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருவரில் ஒருவர் களமிறக்கப்படுவார். இதில் கே எல் ராகுல் ஆஸ்திரேலியா மைதானங்களில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்.

அவருக்கு அதிக அனுபவம் உள்ளது அவர் ஒரு நாள் போட்டிகளில் கீபிங் செய்துள்ளார். அவர் எந்த வரிசையில் இறக்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை அவருக்கு உண்டு. எந்த நேரத்திலும் அவரை கலமிரகலாம் அவர் தொடக்கத்திலும் இறக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார் கம்பீர்.