இந்திய ஏ அணியில் இணைந்த கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இரண்டாவது போட்டியில் களமிறங்கினர். இந்த போட்டியிலும் கே எல் ராகுல் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி நியூசிலாந்து அணி உடனான படு தோல்விக்கு பின் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து உடனான தோல்வியால் இந்திய அணி ஆஸ்திரேலியா போட்டியில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனிடையே அவருக்கு பதிலாக கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதனால் கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட அனுப்பிவைக்கப்பட்டனர்.
இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கே எல் ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய துருவ் ஜூரல் தனி ஆளாக இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார். இவர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய ஏ அணி ஆட்டத்தின் முடிவில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.