cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்த நிலையில் தனி ஆளாக போராடும் கே எல் ராகுல்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போராடி வருகிறது. இறுதி போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஏற்கனவே இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
மேலும் இந்திய அணி மூன்றாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆனால் இந்திய அணி 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் மட்டும் ஆட்டமிழக்காமல் போராடி வருகிறார். ரிஷப் பண்ட் விக்கெட் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் முக்கிய வீரர்களான ஜெய்ஸ்வால் கில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.