தெரிந்து கொள்ளுங்கள்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் காபி குடித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?

Photo of author

By Rupa

பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் உணவு பழக்கங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொண்டால் தான் வயிற்றில் வளரும் சிசு ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இக்காலத்து பெண்கள் உணவுமுறைகளில் அக்கறை செலுத்த விரும்புவதில்லை. வாய்க்கு ருசியாக சாப்பிடவே அதிகம் விரும்புகின்றனர். தங்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எது நல்லதோ அந்த உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு கருத்தரித்த சில மாதங்களுக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்கும். இதை தவிர்க்க காபி, டீ போன்ற சூடான பானங்களை அருந்துகின்றனர். கர்ப்ப காலத்தில் காபி குடித்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கச் செய்துவிடும்.

கர்ப்பிணிகள் காபி குடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்படையும். இதனால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நினைவாற்றல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம்.காபியில் உள்ள காஃபின் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

கருவுற்ற காலத்தில் தாய் என்ன சாப்பிடுகிறாரே அந்த உணவு தான் நச்சுக்’கொடி வழியாக குழந்தைக்கு செல்லும். அப்படி இருக்கையில் காஃபின் நிறைந்த பானங்களை அருந்தினால் அது குழந்தைக்கு தீங்குவிளைவிக்க கூடியதாக மாறிவிடும்.காஃபின் உணவுகள் வயிற்றில் வளரும் குழந்தையில் உடல் எடையை குறைத்துவிடும். காபியை தவிர்க்க முடியாதவர்கள் நாளொன்றுக்கு 100 கிராம் அளவிற்கு மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.