தெரிந்து கொள்ளுங்கள்.. இரும்புச்சத்தை வாரி வழங்கும் கீரைக்கு பதில் இதை சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

மனித உடல் சீராக இயங்க இரும்புச்சத்து அவசியமான ஒன்றாகும்.எலும்புகள் வலிமை பெற,இரத்த சிவப்பணுக்களில் தடையின்றி ஆக்சிஜன் செல்ல இரும்புசத்து முக்கிய பங்காற்றுகிறது.உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் இரத்த சோகை,மூச்சு திணறல்,உடல் சோர்வு,மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் அவசியமாகும்.

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கிறது என்றாலும் எல்லோராலும் தினமும் கீரை வாங்கி சாப்பிட முடியாது.எனவே கீரைக்கு மாற்று இரும்புச்சத்து நிறைந்த வேறு உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

பீட்ரூட்

இது ஒரு கிழங்கு வகையாகும்.இந்த கிழங்கில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.உடலில் இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டு வரலாம்.

உலர் பழங்கள்

திராட்சை,அத்தி,பேரிச்சை உள்ளிட்ட உலர் பழங்களில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த உலர் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ்

பாதாம்,பூசணி விதை,சூரியகாந்தி விதை,வால்நட்,எள் உள்ளிட்ட விதைகளில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கிறது.இரும்புச்சத்து கிடைக்க இந்த விதைகளை தினமும் சாப்பிட்டு வரலாம்.

பருப்பு வகைகள்:

காராமணி,துவரை,பாசிப்பருப்பு போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் கருப்புக்கொண்டை கடலையில்,ப்ரோக்கோலி,முருங்கை கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.