தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

0
283
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் மூலம் புழுங்கல் அரசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை இலவசமாகவும் துவரம் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவைகளை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது.

அதேபோல் ரேசன் கார்டு இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரமாக விளங்குவதால் இதை வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ரேசன் கார்டை பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது .

1)ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய முதலில் http://www.tnpds.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை ஓபன் செய்யவும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள விருப்ப மொழியை தேர்வு செய்யவும்.

2)மொழி கிளிக் செய்த பின்னர் Smart Card Application என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

3) அடுத்து உங்களின் சுய விவரங்களை தவறில்லாமல் பதிவு செய்ய வேண்டும். அடுத்து யார் பெயரில் விண்ணப்பம் செய்கிறோமோ அவரது புகைப்படம் அதாவது குடும்ப தலைவி அல்லது குடும்ப தலைவர் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். இந்த புகைப்படம் 10 KB அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல் png, gif, jpeg, jpg அளவில் அப்லோட் செய்ய வேண்டும்.

4)அதேபோல் அப்ளிகேஷனில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் 100 KBக்கு மிகாமல் png, gif, jpeg அல்லது pdf வடிவில் அப்லோட் செய்ய வேண்டும்.

5)கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி ரேசன் கார்டின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அப்ளை செய்த அடுத்த ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு கிடைத்து விடும்.

Previous articleஉங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள 5 நோய்களை கண்டறியலாம்!! எப்படி தெரியுமா??
Next articleஇந்த 1 டிரிங் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியையும் நீக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!