நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் வாந்தி,மயக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
அளவிற்கு அதிகமாக இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இரும்புச்சத்து மாத்திரையை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் இரத்த வாந்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரையின் அளவு வயதை பொருத்து சாப்பிட வேண்டும்.
19-50 வயதிற்குள் இருக்கும் நபர்கள் நாளொன்றுக்கு 18 மில்லி கிராம் இரும்புச்சத்து மாத்திரையை உட்கொள்ளலாம்.கர்ப்பிணி பெண்கள் 27 மில்லி கிராம் அளவிற்கு உட்கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தண்ணீர்,சூடான பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஆனால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை பானத்தை பருகலாம்.
பால் மற்றும் சூடான பானங்கள் இரும்புச்சத்து மாத்திரையின் பவரை குறைத்துவிடும்.ஆனால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு வைட்டமின் சி சத்து பானங்கள் பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.