தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!!

ஒவ்வொரு பெண்ணும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

**பெண்கள் மஞ்சள் கயிற்றால் மட்டுமே திரு மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

**உக்கர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள் போகக் கூடாது.

**அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

**கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

**பெண்கள் எப்பொழுதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

**பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணத்தை கொண்டும் பூ வைத்துக் கொள்ள கூடாது.

**குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும், வகிட்டிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.

**வெள்ளிக்கிழமையில், விசேஷ நாட்களில் பாகற்காய் சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

**கோலமிடும் போது தெற்கே பார்த்து கொண்டு கோலமிடக் கூடாது.

**திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.

**பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத பெண்கள் உச்சந்தலையில் குங்குமம் இட்டுக் கொள்ள கூடாது.

**கோயிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.